Wednesday, August 7, 2013

Elders accused in daughter in law's suicide denied bail : Chennai/ TN [ 65000 men commit suicide every year]

Elders accused in daughter in law's suicide denied bail : Chennai/ TN [ 65000 men commit suicide every year]


Elders suspected of dowry torture and leading to women's suicide were denied bail by the Honourale Judge Chokkalingam J at chennai

Bhavani, daughter of Yuvaraj, resident of MPK Nagar, was married to Narashimhalu son of Krishnamurthy , south Jagannath Nagar

Marriage was solemnized 4 years ago

Recently Bhavani committed suicide

It was alleged that Vhavani's suicide was caused due to dowry torture. Bhavani's father Yuvraj had preferred a police complaint. RDO inquiry was ordered. 

The elderly parents of the husband were arrested and jailed

They had sought bail which was refused 

complete story and links below 





வரதட்சணை கொடுமை செய்த மாமனார், மாமியார் ஜாமீன் மனு தள்ளுபடி


By dn, சென்னை


First Published : 06 August 2013 04:25 AM IST


வரதட்சணை கொடுமையில், மருமகள் தற்கொலை செய்ய காரணமாக இருந்த மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் ஏ.கே.யுவராஜ் மகள் பவானிக்கும், வில்லிவாக்கம் தெற்கு ஜெகன்நாத நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லட்சுமி நரசிம்மலுவுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணமானது முதல் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி சகுந்தலாவும் நகை மற்றும் பணம் கேட்டு பவானியை கொடுமை செய்தார்களாம். அவர்களின் கொடுமை தாங்காத பவானி, கடந்த ஜூலை 11-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பவானியின் தந்தை யுவராஜ் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், கோட்டாட்சியரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதில், பாவனியின் மாமனார் மற்றும் மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமை செய்தது தெரிய வந்தது. இதன் பேரில், கிருஷ்ணமூர்த்தியையும், சகுந்தலாவையும் வில்லிவாக்கம் போலீஸார் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை எதிர்த்து மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகனும் மனு தாக்கல் செய்தனர். இருவரது மனுவை விசாரித்த நீதிபிதி ஜி.சொக்கலிங்கம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


http://dinamani.com/edition_chennai/chennai/2013/08/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE/article1720745.ece


********************************

FOLLOW 
@ATMwithDick on twitter or 
http://evinayak.tumblr.com/ (recent blog so recent cases ) 
FOR 100s of high court and supreme court cases


regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist

No comments:

Post a Comment