Thursday, August 15, 2013

Woman suicide! Fearing police husband follows : வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை போலீஸுக்கு பயந்து கணவனும் தற்கொலை

A married woman commits suicide... Her family members conduct a road roko and the police also put pressure on the husband. Fearing all this husband also commits suicide. The one and half year old kid is left along !!


Somasundaram , aged 23, resident of NGGOS colony, Namakkal fell in love with and married Akila (aged 20 years ) of O. Sowdapuram. They have a kid aged one and half years olf

Differences cropped up between the couple and the wife filed a complaint before thee Namakkal Police . Police did some mediation / compromise and sent them back

In the meantime, wife left for HER father's house .... It seems Somasundaram and telephoned and called his wife bacl 

She returned to her husband's place, but committed suicide.

Hearing this news a large number of people from Akila's place come to Somasundaram's place and did a road roko / agitation. They also stopped the police who are trying to take Akila's body 

Because of all this pressure, Somasundaram also committed suicide 

The kid is left without both parents !!!!



வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை போலீஸுக்கு பயந்து கணவனும் தற்கொலை


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2013,06:08 IST

 
நாமக்கல்: வரதட்சணை கொடுமை காரணமாக, இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விசாரணைக்கு பயந்து, அவரது கணவரும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் அடுத்த, என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 25. மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், ஓ.சவுதாபுரத்தை சேர்ந்த அகிலாவை, 20, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளில், வரதட்சணை கேட்டு மனைவியை, சோமசுந்தரம் கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், அகிலா கொடுத்த புகார்படி, போலீஸார் சமரசம் செய்து, இருவரையும் அனுப்பி வைத்தனர்.

கடந்த, 8ம் தேதி, கணவன் - மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், அகிலா கோபித்துக் கொண்டு, ஓ.சவுதாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த, 11ம் தேதி, மனைவியை, மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட சோமசுந்தரம், வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டி உள்ளார்.
அதனால், பெற்றோர் வீட்டில் இருந்து கணவன் வீட்டுக்கு வந்த அகிலா, நேற்று மாலை, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றொருக்கு, சோமசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சோமசுந்தரம் வீட்டுக்கு திரண்டு வந்தனர்.
இரவு, 10 மணிக்கு, சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றனர்.

ஆத்திரமடைந்த அகிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஜீப்பை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
டி.எஸ்.பி., (பொறுப்பு) பாண்டியராஜன் மற்றும் போலீஸார், அவர்களை சமாதானம் செய்து, உடலை மீட்டுச் சென்றனர்.
திருமணமாகி மூன்று ஆண்டுகளேயானதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை காரணமாக அகிலா, தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதற்கிடையில், போலீஸ் விசாரணைக்கு பயந்த சோமசுந்தரம், நாமக்கல் வாரச்சந்தை வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
சடலத்தை மீட்ட போலீஸார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துகின்றனர்.



*********************************

FOLLOW 
@ATMwithDick on twitter or 
http://evinayak.tumblr.com/ (recent blog so recent cases ) 
FOR 100s of high court and supreme court cases


regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist


No comments:

Post a Comment